Friday 24 August 2012

SLOKAS - KANAKADHARA STOTRAM - Part-3

Kanakadhara Stotram

Stotram - 16
Sampath karaani sakalendriya nandanani,
Samrajya dhana vibhavani saroruhakshi,
Twad vandanani dhuritha haranodhythani,
Mamev matharanisam kalayanthu manye.
 
Giver of wealth, giver of pleasures to all senses,
Giver of the right to rule kingdoms,
She who has lotus like eyes,
She to whom Salutations remove all miseries fast,
And my mother to you are my salutations.

in Tamil
ஸம்பத்கராணி ஸகலேந்த்(3)ரிய நந்த(3)னானி
ஸாம்ராஜ்யதா(3) நிரதானி (விப(4)வானி) ஸரோருஹாணி
த்வத்(3)வந்த(3)னானி து(3)ரிதாஹரணோத்(3)யதானி
மாமேவ மாதரனிச(H)ம் கலயந்து மான்யே

மைவழிக்
குவளக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி !
வானவர்
மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி !
மெய்வழி
செவிவாய் நாசி விழைந்திடும் இன்பம் போற்றி !
விரித்தமேற்
புலனுக் கெல்லாம் விளங்காத பொருளே போற்றி !
கைநிறை
செல்வம் யாவும் கடைக்கணால் அருள்வாய் போற்றி !
காக்கையை
அரச னாக்கும் கைமலர் உடையாய் போற்றி !
செய்ததீ
வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி !
சிறுமையைப்
பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி ! போற்றி !

Stotram - 17
Yath Kadaksha samupasana vidhi,
Sevakasya sakalartha sapadha,
Santhanodhi vachananga manasai,
Twaam murari hridayeswareem bhaje

He who worships your sidelong glances,
Is blessed by all known wealth and prosperity,
And so my salutations by word, thought and deed,
To the queen of the heart of my Lord Murari.

in Tamil
யத் கடாக்ஷ ஸமுபாஸனாவிதி(4):
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத(3):
ஸந்தனோதி வசனாங்க மானஸை:
த்வாம் முராரி ஹ்ருத(3)யேச்(H)வரீம் ப(4)ஜே!

மோகனன்
துணையே போற்றி ! முழுநில வடிவே போற்றி !
மூவுல
கங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி !
தேகத்தே
ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி !
தீராத
ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி !
ஓர்கணம்
தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி !
ஊர்ந்தமா
மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி !
தாள்களில்
பணிந்தே னம்மா தண்ணருள் தருவாய் போற்றி !
தலைமுதல்
பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி ! போற்றி !

Stotram - 18
Sarasija nilaye saroja hasthe,
Dhavalathamamsuka gandha maya shobhe,
Bhagavathi hari vallabhe manogne,
Tribhuvana bhoothikari praseeda mahye

She who sits on the Lotus,
She who has lotus in her hands,
She who is dressed in dazzling white,
She who shines in garlands and sandal paste,
The Goddess who is the consort of Hari,
 
She who gladdens the mind,
And she who confers prosperity on the three worlds,
Be pleased to show compassion to me.

in Tamil
ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
த(3)வளத(3)மாம்சு)(H)க க(3)ந்த(4)மால்ய சோ(H)பே(4)
ப(4)க(3)வதி ஹரிவல்லபே(4) மனோக்ஞே
த்ரிபு(4)வன பூ(4)திகரி ப்ரஸீத(3)மஹ்யம்

கண்பட்டால்
மனது பாடும் கார்குழல் அலையே போற்றி!
காதள
வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி!
வெண்பட்டால்
அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி!
வெண்மல்லி
கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி!
பண்பட்டார்
இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி!
பணிப்பவர்
இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி!
விண்முட்டும்
ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி!
வேயிரு
தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி!

Stotram - 19
 
Dhiggasthibhi kanaka kumbha mukha vasrushta,
Sarvahini vimala charu jalaapluthangim,
Prathar namami jagathaam janani masesha,
Lokadhinatha grahini mamrithabhi puthreem.

Those eight elephants from all the diverse directions,
Pour from out from golden vessels,
The water from the Ganga which flows in heaven,
For your holy purifying bath,
And my salutations in the morn to you ,
Who is the mother of all worlds,
Who is the house wife of the Lord of the worlds,
And who is the daughter of the ocean which gave nectar.

in Tamil
தி(3)க்(3)க(3)ஸ்திபி(4): கனககும்ப(4) முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாலுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜக(3)தாம் ஜனனீமசே(H)ஷ
லோகாதி(3)நாத க்(3)ருஹிணீம் அம்ருதாப்(3)தி(4) புத்ரீம்

மண்டலத்
திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்தி
மங்கைக்கு
நன்னீராட்ட கங்கைநீர் குடத்தில் மாந்தி
தண்டலக்
கூந்தல் ஊற சர்வமங் களநீ ராட்டி
தாமரைப்
பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி
மண்டிய
தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கி
மறுவிலாப்
பளிங்fகின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்
அண்டமா
நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே!
அரிதுயின்
கொள்ளும் காலை அடியவன் வணங்குகின்றேன்!

Stotram - 20
Kamale Kamalaksha vallabhe twam,
Karuna poora tharingithaira pangai,
Avalokaya mamakinchananam,
Prathamam pathamakrithrimam dhyaya

She who is the Lotus,
She who is the consort,
Of the Lord with Lotus like eyes,
She who has glances filled with mercy,
Please turn your glance on me,
Who is the poorest among the poor,
And first make me the vessel ,
To receive your pity and compassion.

in Tamil
கமலே கமலாக்ஷ வல்லபே(4)த்வம்
கருணாபூர தரங்கி(3)தைர பாங்கை:
அவலோகய மாம் அகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரம் அக்ருத்ரிமம் த(3)யாயா:

பூவினில்
உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே!
பூஜைக்கே
உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வீ!
ஏவுமோர்
உலகத் துள்ளே இன்மையோன் ஒருவ னேதான்
இவனுனை
இரந்தி நிற்க இதுவொரு நியாயம் போதும்!
தாவுநீர்க்
கடலை போல தண்ணருள் அலைகள் பொங்கும்
சநிதிரப்
பிறைப்பூங் கண்ணி சற்றுநீ திரும்பிப் பார்த்தால்
மேவிய
வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோதாய், நின்
மின்னிடும்
விழிகள் காண விழைந்தனேன் போற்றி! போற்றி!

Stotram - 21
Sthuvanthi ye sthuthibhirameeranwaham,
Thrayeemayim thribhuvanamatharam ramam,
Gunadhika guruthara bhagya bhagina,
Bhavanthi the bhuvi budha bhavithasayo.

He who recites these prayers daily,
On her who is personification of Vedas,
On her who is the mother of the three worlds,
On her who is Goddess Rema,
Will be blessed without doubt,
With all good graceful qualities,
With all the great fortunes that one can get,
And would live in the world,
With great recognition from even the learned.

in Tamil
ஸ்துவந்தி யே ஸ்துதிபி(4): அமீபி:(4) அன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபு(4)வனமாதரம் ரமாம்
கு(3)ணாதி(4)கா கு(3)ருதர பா(4)க்(3)ய பா(4)ஜின:
ப(4)வந்திதே பு(4)வி பு(3)த(4) பா(4)விதாஸ்ய:

முப்புவி
ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி!
மூவிரண்
டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்தமாக
அற்புதம்
காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி
ஆனந்தத்
தெய்வமாதா அரும்பெறல் அன்னை பேரில்
இப்பொழுது
ரைத்த பாடல் எவரெங்குபா டினாலும்
இப்புவி
உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்;
நற்பெரும்
பேறும் கிட்டு! நன்னிலை வளரும்; என்றும்
நாட்டுக்கே
ஒருவ ராக நாளவர் உயர்வார் உண்மை!

 

No comments:

Post a Comment